×

திருப்புத்தூர் அருகே அரசு பஸ்கள் மோதி விபத்து

திருப்புத்தூர், நவ. 22: திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு விலக்குப் பகுதியில் இரண்டு அரசு பஸ்கள் ஒன்றொடு ஒன்று உரசியதில் விபத்து ஏற்பட்டது.
மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கி ஒரு அரசு நேற்று மதியம் வந்துகொண்டிருந்தது. அப்போது திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு விலக்குப் பகுதியில் வரும்போது, தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு வந்த அரசு பஸ் வளைவில் திடீரென எதிரே வந்த பஸ்சில் உரசியது. இதில் மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் இழுத்துக்கொண்டுபோய் அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.
மேலும் பஸ்சின் படிக்கட்டுப்பகுதி முழுவதும் பயணிகள் இறங்க முடியாமல் கண்மாயின் உள்ள கருவேல மரங்கள் சூழந்துகொண்டதால், பயணிகள் அனைவரும் டிரைவர் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக மீட்க்கப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. சிலருக்கு லேசான ஊமை காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
இதனையடுத்து, பஸ்சில் இரண்டு பஸ்சில் வந்த பயணிகள் அனைவரையும் மாற்றுப் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் தஞ்சாவூர் சென்ற பஸ்சை திருப்புத்தூர் போக்குவரத்து பெட்போவிற்கு கொண்டு சென்றனர். காரைக்குடி நோக்கி வந்த பஸ், எடுக்க முடியாததால் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruputhur ,
× RELATED திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை