×

திருவாடானை பகுதியில் நிரம்பாத கண்மாயால் நிம்மதியிழந்த விவசாயிகள்

திருவாடானை, நவ. 22:  திருவாடானை தாலுகாவில் கன மழை எப்போது பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை கண்மாய் குளங்கள் நிரம்பாததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் மாவட்டத்திலேயே அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படும் தாலுகா ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் வறட்சி நிலவி வந்ததால், நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த சிறிய பருவ மழையை கொண்டு நெல் விவசாயத்தை தீவிரமாக செய்து விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர். வடகிழக்கு பருவமழை கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஓரளவு பெய்து நெல் பயிர்கள் அனைத்தும் நல்ல நிலையில் வளர்ந்து உள்ளது. அதன்பிறகு தொடர்ந்து வெயில் அடித்து வருவதால் வயல்வெளியில் இருந்த தண்ணீர் வறண்டு விட்டது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் மழை பெய்யவில்லை என்றால், மானாவாரி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விடும். நஞ்சை நிலங்களை பொறுத்தளவில் கண்மாயில் உள்ள சிறிய அளவிலான தண்ணீரை கொண்டு நெல் பயிரை காப்பாற்றி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கண்மாய் குளங்களில் மழை அதிகளவில் பெய்யாததால் போதிய அளவு நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் மழை பெய்யுமா விவசாயம் கை கொடுக்குமா என்ற கவலையில் விவசாயிகள் வானத்தையே பார்க்கும் நிலையில் உள்ளனர்.

Tags : area ,Thiruvadanai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...