×

மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேமுதிக சார்பில் விருப்ப மனுக்கள்

மதுரை, நவ.22: மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் பெற்றுச் சென்றனர்.
  மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேமுதிகவினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். மதுரை உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் மாநில வழக்கறிஞர் துணைச் செயலாளர் பாக்கியசெல்வராஜ், உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன் தலமை வகித்தனர். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தேமுதிக கட்சி அலுவலகத்தில்,  . மாநகர் செயலாளர் சிவக்குமார், புறநகர் செயலாளர்கள் கணபதி, பாலச்சந்திரன் இவர்களது முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட இம்மனுக்களை பெற்றனர். மதுரை மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அலுவலகத்தில் திரண்டு மனுக்களை பெற்றனர்.  தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன்,  மேள தாளம் முழங்க பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோருடன் ஊர்வலமாக வந்து, மாமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமனுவை வாங்கிச் சென்றார்  நவ.25ம் தேதி வரை விருப்ப  மனுக்கள் தேமுதிக நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Petitions ,Madurai District Local Elections ,
× RELATED பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை...