×

குண்டாஸில் 2 பேர் கைது

மதுரை, நவ. 22: மதுரையில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை மகாத்மா காந்திநகர் தாமரைமலர் 3வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி மகன் அருண்குமார் (19). மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் அல்வா (எ) உமாமகேஸ்வரன் (23). இவர்கள் இருவர் மீதும் மாநகர் காவல்நிலையங்களில் கொலை வழக்கு உள்ளது. எனவே, இவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில், அருண்குமார், உமாமகேஸ்வரன் ஆகிய இருவரும் நேற்று குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED கந்தசஷ்டி விவகாரம் கருப்பர்...