×

சேடபட்டி அருகே அரசு பஸ் டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து 2 பெண்கள் உள்பட 3 பேர் எஸ்கேப்

பேரையூர், நவ. 22:  சேடபட்டி அருகே முன்விரோதம் காரணமாக அரசு பஸ் டிரைவரை 2 பெண்கள் உட்பட 3 பேர் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மாளப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த ராமர் மகன் முருகன்(21), இதே ஊரைச்சேர்ந்த எதிர் வீட்டில் குடியிருக்கும் பெருமாள் மகன் காசிமாயன் (40). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முருகன் தனது வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது, காசிமாயன், இவரது தாய் லிங்கம்மாள்(63), இவரது மனைவி நதியா(36) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் முருகன் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். இந்த நிலையில் கத்தி, அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான காசிமாயன், நதியா, லிங்கம்மாள் 3 பேரையும் சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : persons ,Sedapatti ,state bus driver ,
× RELATED அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மர்ம நபர்களால் காரில் கடத்தல்