×

ஊராட்சி தலைவர் பதவி ஏலமா?

மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள 420 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் யார்? யார்? என்ற பேச்சுகளும் பரபரப்பான பேச்சாக உள்ளன. முந்தய தேர்தல்களில் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி தலைவர் பதவி பணத்துக்கு ஏலம் போவதாக புகார் எழுந்து, அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்தனர். இந்த தேர்தலில் அம்மாதிரி ஏலம் போகிறதா? என கண்காணிக்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அம்மாதிரி எந்த கிராமத்தில் இருந்து வந்தாலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையில் புகார் நிரூபணமானால் அந்த ஊராட்சி தலைவர் தேர்தல் ரத்து செய்யப்படும்” என்றார்.

Tags : bailiff ,
× RELATED மணல் திருட்டு வழக்கில் முன்ஜாமீன்...