×

சமயநல்லூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி கல்லூரி விரிவுரையாளர் பலி

வாடிப்பட்டி, நவ.22: சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). அழகர்கோயில் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து வாடிப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சமயநல்லூர் கட்டப்புளி நகர் என்னுமிடத்தில் பின்புறமாக வந்த சரக்குவேன் மோதியது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Van ,Samayannallur ,
× RELATED அயப்பாக்கத்தில் பதுக்கி வைத்து...