×

திருமங்கலம் நகராட்சியில் ஆணையாளர், பொறியாளர் பணியிட மாற்றம்

திருமங்கலம், நவ.22: திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளராக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் பொறியாளர் சக்திவேல் நேற்று ராமேஸ்வரம் நகராட்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றியதை தொடர்ந்தும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற நிலை இருப்பதால் பணிமாறுதல் செய்யப்பட்டதாக நகராட்சி தரப்பில் கூறப்பட்டது. இதனால் தற்போது இந்த நகராட்சியில் ஆணையாளர், பொறியாளர் ஆகிய முக்கிய பொருப்புகளில் அதிகாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Workplace Transfer of Commissioner ,Engineer ,Thirumangalam Municipality ,
× RELATED பொதுப் பணித்துறையில் தொடரும்...