ஒட்டன்சத்திரம் முத்துநாயக்கன்பட்டியில் உயிர் உரங்கள் விழிப்புணர்வு முகாம்

ஒட்டன்சத்திரம், நவ. 22: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக உயிர் உரங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் வெள்ளைசோளத்தில் ஒரு ஏக்கருக்கு தேவையான வெள்ளைச் சோள விதைகளை (1200 கிராம்) அசோபாஸ் என்ற உயிர்உரத்துடன் விதை நேர்த்தி செய்வது பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விதையினால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுத்துவதுடன் விதை நேர்த்தி செய்யப்படுவதால் விண்ணில் உள்ள தழைச்சத்து கிரகித்து பயிற்களுக்கு அளிக்கப்படுகிறது எனவும், உயிர் உரங்கள் பற்றியும், அதன் பயன்கள் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் மதுரை வேளாண்மைக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகள் தர்ஷினிபிரியா, திவ்யா, இலக்கியா, மன்மிதா, கீதப்பிரியா, கோபிகா, கௌரிகார்த்திகா, ஆகியோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

Related Stories: