திண்டுக்கல்லில் முக்கிய பகுதியில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க கோரிக்கை

திண்டுக்கல், நவ. 22: திண்டுக்கல்லில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியானதே தவிர இன்னும் சுகாதாரம் இல்லாமலே உள்ளது. வெளியூர் நபர்கள், வியாபாரிகள், ரயில், பஸ் பயணிகள் சிறுநீர் கழிக்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் திறந்த வெளி சிறுநீர் கழிக்கும் இடத்தை சுத்தம் செய்ய மிகவும் சிரமபடுகின்றனர்.

ஆங்காங்கே திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு கழிவுநீர் ஒடையின் மேல் பகுதி 3 சுவர் எழுப்பி கதவு போட்டு பீங்கான் சாய்வாக வைத்து சிறுநீர் கழிக்க மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தால் பொதுமக்கள் பயண்படுத்திக்கொள்வர். முதலில் ரயில் நிலையம், பஸ்நிலையம் பகுதி, கடைவீதி பகுதிகளில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் இலவசமாக சிறுநீர் கழிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: