×

12 வயது மகளை திருமணம் செய்து தரக்கோரி கள்ளக்காதலிக்கு கொலை மிரட்டல்: வியாபாரி கைது

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மகளை திருமணம் செய்து வைக்கக் கோரி கள்ளக்காதலியை அடித்து கொலை மிரட்டல் விடுத்த கோழிக்கறி கடை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அம்பேத்கர் நகர், மரகதம் சந்திரசேகர் தெருவை சேர்ந்தவர் ஷேக் முகமது (28). இவர், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஜெயலட்சுமி (35) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஷேக்முகமது அடிக்கடி ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவரது மூத்த மகள் 12 வயது சிறுமியை கடந்த 2017 செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இதனை அறிந்த ஜெயலட்சுமி ஷேக் முகமதுவை கண்டித்ததால் அவர் ஜெயலட்சுமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அவரை ஜெயலெட்சுமி மன்னித்துள்ளார். இதன் பிறகும், இவர்களது கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது.  நே ற்று முன்தினம் ஷேக்முகமது கள்ளக்காதலி ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து அவரது மகளை திருமணம் செய்து தரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஷேக்முகமது சரமாரியாக ஜெயலட்சுமியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக்முகமதுவை கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags : Murder ,
× RELATED கறி கடைக்காரர் வெட்டிக்கொலை