×

கல்லூரி மாணவர் தற்கொலை

பூந்தமல்லி, நவ. 22: திருவேற்காடு, பெருமாள் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் வெங்கடரூபேஷ் (20). மேடவாக்கத்தில் உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வெங்கட ரூபேஷ் வந்தார். அப்போது வீட்டில் பெற்றோர் வெளியே சென்று இருந்ததால் வெங்கட ரூபேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு அவரது பெற்றோர் வீட்டில் வந்து பார்த்தபோது வெங்கட ரூபேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கட ரூபேஷ்  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்துப்போன வெங்கட ரூபேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வெங்கட ரூபேஷ்க்கு சரியான முறையில் படிக்க முடியாமல் அவதிப்பட்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

Tags : College student suicide ,
× RELATED ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தி.: கல்லூரி மாணவர் தற்கொலை