×

வல்லூரில் நாளை நடக்கிறது திமுக உறுப்பினர்கள் கூட்டம்

பொன்னேரி, நவ. 22: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நாளை சனிக்கிழமை வல்லூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு தலைமை தாங்குகிறார்.

முன்னாள் அமைச்சர் க. சுந்தரம், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, திமுக தீர்மான குழு உறுப்பினர் சி.எச்.சேகர், மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் நாகலிங்கம், அவைத்தலைவர் பகலவன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் பொன்னேரி சுகுமாரன், சோழவரம் செல்வசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, பேரூர் கழக செயலாளர்கள் மீஞ்சூர் மோகன்ராஜ், பொன்னேரி டாக்டர் விஸ்வநாதன் உள்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர். பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : DMK ,Vallur ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்...