சொத்து பத்திரங்களை பறித்துக்கொண்டு கணவனை வீட்டை விட்டு அடித்து விரட்டிய மனைவி

திருவள்ளூர், நவ. 22: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (50). இவர், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் நேற்று கொடுத்த புகார் மனுவின் விவரம்:ருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எனக்கு 15 ஏக்கர் விவசாய நிலம், டிராக்டர் மற்றும் வீடு சொந்தமாக உள்ளது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், என் மனைவி மற்றும் மகன் இருவரும் எனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.  தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் என்னுடைய சொத்து பத்திரங்களை பறித்துக்கொண்டு என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டனர். இதனால் வாழ வழியின்றி திருவூர் கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன்.

எனவே என் மனைவி மற்றும் மகனிடம் இருந்து எனது நில பத்திரங்களை மீட்டுத்தரவும், உயிருக்கு பாதுகாப்பு தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார். அவரது மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : house ,
× RELATED மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது