×

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

ஆவடி, நவ. 22: ஆவடி, பக்தவச்சலபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆவடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோயிலை அர்ச்சகர் பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அர்ச்சகர் வந்தபோது கதவு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் டேனி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Tags : Temple ,robbery ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு;...