×

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது

பல்லாவரம், நவ.22: பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் பால்துரை (38). நேற்று முன்தினம் இரவு பால்துரை, பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பொழிச்சலூர் பிரதான சாலையில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்றிருந்தனர்.அவர்களிடம், நீங்கள் யார். எதற்காக இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள் என பால்துரை விசாரித்தார். அதற்கு அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர், 3 பேரையும் காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளார். உடனே 3 பேரும், போலீஸ்காரர் பால்துரையை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பமுயன்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள், அவர்களை விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். ஒருவர் தப்பிவிட்டார். பின்னர், 2 பேரையும், சங்கர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பொழிச்சலூரை சேர்ந்த மணிகண்டன் (33) காந்தி (38) என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இன்பராஜ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : policeman ,
× RELATED உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்