×

காஞ்சி சங்கரா பல்கலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. அதில், மாணவர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழக கல்வியியல் புலத்தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி சிவபாதசேகரன் கலந்து கொண்டார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதியேற்றனர்.இதில் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், அண்ணாதுரை, எஸ்ஐ ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நாட்டு நலப்பணித்திட்ட செயல் அலுவலர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Kanchi Sankara University ,
× RELATED மாநில விளையாட்டுப் போட்டி: காஞ்சி சங்கரா பல்கலை. முதலிடம்