×

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், நவ.22: விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்க உள்ளதாக கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று, காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய பதில் அளிப்பார்கள்.எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்னைகளை நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : meeting ,
× RELATED விவசாயிகள் போராட்டம்