×

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், நவ.22: கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக, தொடக்க நிலையில் உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க http/worldskillsindia.co.in/worldskill/world என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க, வரும் 25ம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்பதாரர்கள் கடந்த 1.1.1999ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழில்பிரிவுகளுக்கு 1.1.1996ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.5 முதல் பிளஸ் 2 வரை கல்வி தகுதி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழில்பயிற்சி நிலையம், தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள், படிப்பவர்கள், தொழிற்சாலை பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழில்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 044-29894560 என கூறப்பட்டுள்ளது.

Tags : district level competitions ,
× RELATED தேசிய நூலக வார விழாவையொட்டி இளம்...