×

சர்க்கரையில் இருந்து அரிசிக்கு ரேஷன் கார்டு வகை மாற்றம்

காஞ்சிபுரம், நவ.22: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முலம் வழங்கப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் குடும்ப அட்டைகளில் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களின் தகுதி அடிப்படையில், தங்களது குடும்ப அட்டையை அரிசி அட்டையாக வகை மாற்றம் செய்யலாம்.
அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் கார்டு நகலை இணைத்து இன்று முதல் வரும் 2ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலும் அளிக்கலாம்.

விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் கார்டாக மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  சர்க்கரை விருப்ப அட்டை வைத்திருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags :
× RELATED சேலம் காவேரி மருத்துவமனையில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம்