×

விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ₹1.18 கோடியில் உணவகம், உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

திருப்போரூர், நவ.22: விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்திஙர ₹1.18 கோடியில் உணவகம், உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இதன் வளாகத்தில் ₹35 லட்சத்தில் நுழைவாயில், ₹43 லட்சத்தில் உணவகம், ₹40 லட்சத்தில் உடற்பயிற்சிக்கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் ஷீலா ஸ்டீபன் வரவேற்றார். தமிழக அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இப்போது அவர் பேசுகையில், விளையாட்டு துறையில் சிறந்த போட்டியாளர்களை உருவாக்க வேண்டும் என தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு செயல்படுகிறது. மாணவர்களுக்கு விளையாட்டு துறை முன்னேற்றத்துக்கு கல்வியாளர்கள், விளையாட்டில் சிறந்தவர்கள் உள்பட 25 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இவர்கள், விளையாட்டு துறையில் ஆண்டுக்கு 100 பேர் கொண்ட மாணவர்களை தேர்வு செய்வர்.

அவர்களுக்கு தனியார் நிறுவன பங்களிப்புடன் தங்குமிடம், இலவச கல்வி, உணவு மற்றும் பயிற்சி வழங்கப்படும். இவர்கள் விளையாட்டில் நமது நாட்டுக்காக பல்வேறு சாதனைகளை புரிவதற்காக உருவாக்க உள்ளோம். இவர்களின் வேலைக்கும் உத்தரவாதம் வழங்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் விளையாட்டால் நமக்கு எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்படும்.இந்த வளாகத்தில் இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு அரங்கத்தை பராமரிக்கும் பணிக்கு தனியார் நிறுவனங்கள் உதவியை நாடியுள்ளோம் என்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : restaurant ,gymnasium opening ,Sports University ,
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...