×

மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி

ஊட்டி, நவ.22: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் ஊட்டியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று ஊட்டியில்  நடந்தது. இப்பேரணி மத்திய பஸ் நிலையம் அருகே துவங்கி லோயர் பஜார் சாலை, கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதியை சென்றடைந்தது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணியின்போது, பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு மது அருந்துவதை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம், நடன நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக, இப்பேரணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். ஊட்டி ஆர்டிஓ சுரேஷ், நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags : Liquor Awareness Rally ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்