×

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இன்ஸ்பெயர் முகாம் நாளை துவக்கம்

ஊட்டி, நவ.22: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இன்ஸ்பெயர் முகாம் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 11ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர் சனில் கூறியதாவது, இன்ஸ்பெயர் முகாம் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. 11ம் வகுப்பில் அறிவியல் அல்லது கணிதவியல் பயிலும், மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்துக் கொள்ள தகுதியானவர்கள். இன்று 22ம் (தேதி) நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.2 சதவீத்திற்கு மேல் (ஸ்டேட் போர்டு), 95 சதவீதம் (சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ) மதிப்பெண் பெற்றிருக் வேண்டும்.

இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. தகுதி பெறும் மாணவர்கள், முழு நிதியுதவிடன் இலவசமாக இம்முகாமில் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை dstinspire.ooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இரு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இம்முகாம் தொடர்பான முகாம்களுக்கு முனைவர் சனில், 6380911077 மற்றும் அர்ச்சனா ராஜன் 9488726553 என்ற ஆகிய செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு www.govtartscollegeooty.org.in என்ற இணைய தளம் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

Tags : Inspire Camp ,Ooty Government Art Gallery ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்