×

மழை பெய்தால் குளமாக மாறும் பெள்ளத்திகம்பை சாலை சீரமைக்க பழங்குடி மக்கள் கோரிக்ைக

மஞ்சூர், நவ.22:  பெள்ளத்திகம்பை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்திகம்பை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்வது, வனத்துறையின் அனுமதியுடன் வனங்களில் துடைப்பம் தயாரிக்க பயன்படுத்தும் பாம்புற்கள் சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் பென்ஸ்டாக் பிரிவில் இருந்து பெள்ளத்திகம்பை கிராமத்திற்கு செல்லும் சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலையில் போடப்பட்ட ஜல்லிகற்கள் பெயர்ந்து தார்ரோடு மண் ரோடாக கணப்படுகிறது. பல இடங்களில் பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டு மிகவும் மோtசமான முறையில் காட்சியளிக்கிறது.  

மழை பெய்தாலே குழிகளில் வெள்ளம் தேங்கி குளம்போல் மாறிவிடுகிறது. ஏற்கனவே பெள்ளத்திகம்பை கிராம மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் வாகன வசதிக்காக 2 கி.மீ. தூரம் உள்ள ஓணிகண்டி பகுதிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.  இந்நிலையில் சாலை படு மோசமாக உள்ளதால் நடந்து செல்வதில் கூட பெரும் சிரமம் உள்ளதாக கிராமமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பென்ஸ்டாக் பிரிவு முதல் பெள்ளத்திகம்பை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Bellathigambai ,pond ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...