×

கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் கடன் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்

கூடலூர், நவ.22:  நீலகிரி மாவட்ட பாஜ பொது செயலாளர் சந்திரன்  நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகள் விலை நிலங்களில், ரசாயன உரங்களை தவிர்த்து மண்ணின் தன்மைக்கு ஏற்ப இயற்கை உரங்களை பயன்படுத்தி பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயிர் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெரும் பயிர் கடன் தொகையில் 25% ரசாயன உரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென நீலகிரி மாவட்ட மத்திய விற்பனை சங்கத்தின் மூலம் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். ‘

 ஆனால் இந்த சங்கத்திலிருந்து வழங்கப்படும் உரம் தரமில்லாததாகவும், விவசாயிகளின் தேவைக்கேற்ப உரம் இருப்பு இல்லாமலும் உள்ளதால் விவசாயிகளின் 25 சதவீத கடன் தொகை வீணாகிறது. எனவே விவசாயிகள் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி மண்வளத்தைப் பாதுகாக்கவும், ரசாயன கலப்பில்லாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை பயன்படுத்தி விவசாயத்தில் செழிப்படைய அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Societies ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...