×

2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி நலத்திட்ட உதவி

கோவை, நவ. 22: கோவையில் 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் மற்றும்  கரும்புகடை ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வரின் சிறப்பு  குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். பின்னர், 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் (கோவை தெற்கு), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, கோவை தெற்கு தாசில்தார் தேவந்திரன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...