இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். ஈரோட்டில் அர்ப்பணிப்பு போலீஸ் பீட் 5 சப்-டிவிசனுக்கு 54 பேர் நியமனம்

ஈரோடு, நவ.22: ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் நல்லுறவை மேம்படுத்த புதிதாக அர்ப்பணிப்பு போலீஸ் பீட்டினை எஸ்பி சக்தி கணேசன் உருவாக்கி 54 போலீசாரை நியமித்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பெருந்துறை, பவானி ஆகிய 5 போலீஸ் சப் டிவிசன்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அர்ப்பணிப்பு போலீஸ் பீட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பீட்டிற்கு பிரிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் அவர்களுக்கு உண்டான பணிகள் குறித்தும் எஸ்பி சக்திகணேசன் நேற்று விளக்கம் அளித்து பேசினார்.இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறியதாவது:5 சப்-டிவிசன்களில் அர்ப்பணிப்பு (டெடிகேட்) போலீஸ் பீட் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் 3 போலீசார் என மொத்தம் 54 பேர் ஒதுக்கீடு செய்துள்ளேன். அவர்கள் அந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பிரச்னை, அதற்கு உண்டான தீர்வு என்ன என்பதை மக்களிடம் எடுத்து சொல்வார்.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள பழங்குற்றவாளிகள் யார்?, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதை முன்பே அறிந்திருக்க வேண்டும். இந்த போலீசார் மக்களிடம் நெருங்கி பழகி, அவர்களுக்கு தெரிந்த போலீசார் போல இருக்க வேண்டும். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு மேம்படும், குற்றச்சம்பவங்கள் குறையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: