×

ஈரோடு பிரப் ரோடு பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு

ஈரோடு, நவ.22: ஈரோட்டில் பிரப் ரோட்டிற்கு மீனாட்சிசுந்தரானார் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிறிஸ்தவ அமைப்பினர் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் புகார் மனு அளித்தனர்.ஈரோடு மாநகரின் முக்கிய ரோடான பிரப் ரோட்டிற்கு கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரப்ரோடு என பெயர் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரப் ரோட்டின் பெயரை மீனாட்சி சுந்தரனார் ரோடு என மாற்றம் செய்தார். இதற்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந் நிலையில், நேற்று ஈரோடு மாநகராட்சி அருகே பிரப் சர்ச்சிற்கு எதிரே பிரப் ரோடு என்ற பெயர் பலகையை அகற்றி விட்டு மீனாட்சி சுந்தரனார் ரோடு என பலகை வைத்து அதை திறப்பு விழா செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஎஸ்ஐ பிரப் நினைவாலயத்தின் செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஸ்குமார் தலைமையில் நிர்வாகிகள், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:ஈரோடு நகராட்சியாக இருந்தபோது நகர தலைவராக பிரப் இருந்து வந்தார். பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து அரசு தலைமை மருத்துவமனை வரை கரடு, முரடாக இருந்த ரோட்டை சீரமைத்து ரோடு அமைத்து கொடுத்துள்ளார். அவரது நினைவாக இந்த ரோட்டிற்கு பிரப்ரோடு என பெயர் வைக்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இருந்த வந்த பெயரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விழாவில் மீனாட்சிசுந்தரனார் சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளார். நேற்று இதற்கான பெயர் பலகை திறக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் மனதும் புண்படும் நிலையில் உள்ளது. தற்போது அகற்றப்பட்ட பிரப்ரோடு என்ற பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது