காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார்

சேத்தியாத்தோப்பு, நவ. 22:  சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனை பற்றி முகநூலில் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளதை கண்டித்து அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஒன்றிய பொருளாளர் ரஜினி வளவள், ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயசீலன், ராஜசேகர், மனோகரன், மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர், சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags : police station ,
× RELATED காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்