தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது

திட்டக்குடி, நவ. 22: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(எ)சுந்தரராஜன் (25). இவர் திட்டக்குடி பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு
வழக்குகளில் தொடர்புடையவர்.  கடந்த 3 வருடங்களுக்கு முன், திருட்டு வழக்கு சம்பந்தமாக ஆவினங்குடி போலீசார் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சுந்தர், விசாரணை நடக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் திட்டக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் தாமரைஇளங்கோ, இது குறித்து விசாரணை நடத்தி சுந்தரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இந்நிலையில், காவல் துறை ஆய்வாளர் பிரியாவுக்கு கிடைத்த ரகசிய தகவலில், சுந்தர் அவரது சொந்த ஊரான உடையார்பாளையத்தில் பதுங்கிருப்பது தெரிய
வந்தது.இதையடுத்து ஆவினங்குடி போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த சுந்தரை கைது செய்தனர். பின்னர் திட்டக்குடி குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வடியாத மழை வெள்ள நீரால் கடலூர் பகுதி மக்கள் பாதிப்பு