×

மூடி கிடக்கும் கிராம சேவை மையத்தை திறக்க வேண்டும்

நெய்வேலி, நவ. 22: நெய்வேலி மந்தாரக்குப்பம் அடுத்த உய்யக்கொண்டராவி ஊராட்சியில், கோட்டகம்  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள கிராம மக்களின் வசதிக்காக சிட்டா, பட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை,  வங்கி கடன் உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பிக்க கிராம சேவை மையம் கட்டிடம் உய்யக்கொண்டராவி கிராமத்தில் ரூ.14.43 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் கடந்த 2014-15ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் கட்டி முடித்து கடந்த 4 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த கிராம சேவை மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் தாலுகா அலுவலகம் மற்றும் தனியார் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். கிராம சேவை மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : service center ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...