வடிகால் கால்வாயை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, நவ. 22: வடிகால் கால்வாயை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநத்தத்தை அடுத்துள்ள தச்சூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததால் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால், மழைநீர் கழிவுநீருடன் கலந்து அப்பகுதி தெருவில் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அப்பகுதி மக்கள் இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தேங்கி நிற்கும் தண்ணீர் அருகே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி செயலாளர் மருதமுத்து, இப்பிரச்னை குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

Tags : Demonstration ,drainage canal ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி...