×

சேர்மன் பதவிக்கு காய் நகர்த்தும் அரசியல் பிரமுகர்கள்

புதுக்கோட்டை, நவ.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட சேர்மன், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன், ஒன்றிய சேர்மன் பதிகளை பெற இப்போதே காய் நகர்த்த அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய நபர்கள் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி நிர்வாகிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல நேரங்களில் பல அரசியல் கட்சிகள் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வந்தனர். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அந்தெந்த மாவட்டங்களில் கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலை பெருத்தவவரை பல பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். குறிப்பாக நகராட்சி சேர்மன், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி சேர்மன், பேரூராட்சி கவுன்சிலர், ஒன்றிய சேர்மன், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட சேர்மன், மாவட்ட கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என பல பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.  இதில் மாவட்ட சேர்மன், நகராட்சி சேர்மன், ஒன்றிய சேர்மன், பேரூராட்சி சேர்மன் உள்ளிட்ட பதவிகள் முக்கிய பதவிகளாக கட்சியினர் இடையே பார்க்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருவரங்குளம், கந்தர்வகோட்டை, மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், விராலிமலை, அன்னவாசல், குன்றண்டார்கோவில் உள்ளிட்ட 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட சேர்மன், நகராட்சி சேர்சமன், பேரூராட்சி சேர்மன், ஒன்றிய சேர்மன் பதிகளை பெற இப்போதே காய் நகர்த்த அந்ததெந்த பகுதியில் உள்ள முக்கிய நபர்கள் தொடங்கிவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இது குறித்து ஒரு அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி கூறியதாவது: தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி சேர்மன் பதவிக்கு மக்கள் ஓட்டு என்பதால் இதற்கு பெரிய அளவில் அரசியல் நகர்வுகள் நடக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சியிலும் சீட் பெறுவதில் பெரிய அரசியல் நகர்வுகள் மட்டுமே இருக்கும். இது மக்கள் மத்தியில் பெரிய தாக்கம் ஏற்படாது. ஆனால் ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன் பதவிகள் கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் பதவி. இதில் பெரிய அளவில் பெரிய அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் முதலில் கவுன்சிலர் ஆக வேண்டும் என்பதில் அந்தெந்த ஒன்றிய பகுதியில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். மேலும் சேர்மன் பதவிக்கு யாரெல்லாம் போட்டியாக வருவார்கள் என்பதை தெரிந்துகொண்டு அவர்களை கவுன்சிலர் பதவியிலேய தோல்வியடைய செய்ய காய் நகர்த்தி வருகின்றனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் முக்கிப பிரமுகர்ள் அவர்களுக்கு நெருக்காமக இருப்பர்கள், வேண்டியவர்களை கட்சி பேதம் இன்றி ரகசியமாக சந்தித்து நான் வெற்றி பெற்றால் சேர்மன் பதவிக்கு இப்படி காய் நகர்த்த வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் சேர்மன் பதவிக்கு அப்படி காய் நகர்த்த வேண்டும். இரண்டு பேரும் வெற்றி பெற்றால் சேர்மன் பதவிக்கு எப்படி காய் நகர்த்த வேண்டும் என்று பேசி வருகின்றனர். மேலும் எதிரிகளை எப்படி கவுன்சிலர் பதவியிலேய வீழ்த்துவது என்று மும்முரமாக ஆலோசனை செய்து பணியாற்ற தொடங்கிவிட்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேர்மன் ஆவதற்கான காய் நகர்த்தல்கள் கன கச்சிதமாக நடந்தேரி வருகிறது என்றார்.

Tags :
× RELATED பாழடைந்த மண்டபத்தில் நள்ளிரவில்...