×

வயலில் புதையல் கிடைத்ததாக வதந்தி

விராலிமலை, நவ. 20: விராலிமலை அருகே வயலில் உழவு பணிகள் செய்த கிடைத்த உலோக பாத்திரங்கள் கிடைத்ததை புதையல் கிடைத்து விட்டதாக ஏற்பட்ட புரளியால் போலிசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே உள்ள கூத்தகுடி பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் சந்திரன் விவசாயி. இவர் கடந்த மாதம் தனது வயலில் டிராக்டரில் உழவு பணிகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் சிலதினங்களுக்கு பிறகு வரப்புகளை சீரமைத்தார். அப்போது மண் அரித்த சிதைந்துபோன நிலையில் செம்புபோன்ற உலோகத்தினால் 4 கலயங்கள் மற்றும் 2 தட்டுவடிவம் உள்ள பாத்திரங்கள் கிடைத்துள்ளது. இதில் புதையல் இருக்கும் என நினைத்து வீட்டிற்கு கொண்டு சென்று பாத்துள்ளார். இதில் எதுவும் இல்லை. ஏமாற்றம் அடைந்த இவர் மண் அரித்த நிலையில் இருந்த உலோக பாத்திரத்தை இவர் வீட்டின் பின் புறத்தில் உள்ள ஒரு கொட்டைகையில் சாக்கில் கட்டி வைத்திருந்தார். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவரவே புதையல் கிடைத்து விட்டதாக புரளி கிளம்பியது.

இதுகுறித்து வருவாய் துறைக்கு முதல் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வருவாய் துறையினர் மற்றும் விராலிமலை போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து கலசம் மற்றும் தட்டுபோல இருந்த உலோக பொருளை கைப்பற்றி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்க விராலிமலை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே இது எந்த காலத்தை சேர்ந்தது என தெரியவரும். விராலிமலை அருகே வயலில் கலசங்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் விராலிமலை மற்றும் இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags : field ,
× RELATED பாழடைந்த மண்டபத்தில் நள்ளிரவில்...