×

கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

கந்தா;வகோட்டை, நவ.20: கந்தர்வகோட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்பி அருண் சக்திகுமார் கள்ளதனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி கந்தர்வகோட்டை எஸ்.ஐ சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.அண்டனூர் பகுதிகளில் பதுக்கி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கஸ்தூரி (42), ராஜேந்திரன்(58) ஆகிய இருவரையும் கைது செய்யதனர். அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் புணல் குளத்தில் விற்பனை செய்த இளங்கோவன்(42), மோகனூரில் சின்னையன்(67) ஆகிய இருவரையும் கைது செய்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று மங்களாகோயிலில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த சின்னையா (55) கைது செய்யப்பட்டு 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் செயல்படாத கிராமங்களில் இதுபோன்று கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நடவடிக்கை தொடரும் என எஸ்ஐ சுந்தரமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.

Tags :
× RELATED மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும்போது...