×

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை, நவ.20: புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி  நடந்தது.புதுக்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அலுவலகத்திற்கு புதிய ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க வருபவர்கள், ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க வருபவர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவுராஜ் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவுராஜ் கூறுகையில், சாலை போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து சின்னங்கள், சமீக்கைகள், தகவல் சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் போன்ற சின்னங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிக்னல் இல்லாத இடங்களில் எவ்வாறு வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்கி சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Tags : traffic office ,
× RELATED சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் நியமனம்