×

குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கருத்தரங்கம்

புதுக்கோட்டை, நவ.20: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் நடத்திய கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரி இளையராஜா, மாவட்ட குழந்தைகள் நலகுழு உறுப்பினர் மல்லிகா, இளைஞர் நிதிக்குழு உறுப்பினர் லதாஉத்தமன் மற்றும் உறுப்பினர் சசிகலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.விழாவில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் பள்ளி குழந்தைகளை வாழ்த்தி பேசினார். முடிவில் சிறப்பு விருந்தினர் சசிகலா நன்றி கூறினார்.

Tags : Child Protection Program Seminar ,
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரம்