×

தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

பொன்னமராவதி,நவ.20: உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும் என்பட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.பொன்னமராவதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதிராசு தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாத்தையா, நிர்வாகிகள் நாகலிங்கம், பிரதாப்சிங், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு முதமைச்சரின் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும், 60 வயது முடிந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும், புறம்போக்கு இடங்களில் குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பழைய பேருந்து நிலையத்தை தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது. உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தாலுகா அலுவலகத்தில் வழங்கினர். முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு இந்த கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் நிர்வாகிகள் செல்வம், வெள்ளைச்சாமி, மாரிக்கண்ணு, பெரியாண்டி, ராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சரங்கா திட்டம் மேட்டூர் பாசன...