×

குற்றவாளிகளை கைது செய்ய கோரி விசி கட்சியினர் சாலை மறியல்

திருமயம்,நவ.20: திருமயம் அருகே கடந்த வாரம் விசி கொடி கம்பத்தை அவமரியாதை செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள விசி கட்சி கொடிகம்பத்தில் இருந்து கொடியை கடந்த வாரம் இறக்கிவிட்டு அதில் செருப்பை கட்டிதொங்கவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து அக்கட்சியினர் விசி கொடி கம்பத்தை அவமரியாதை செய்த மர்ம நபர்கள் மீது நமணசமுத்திரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விசி கட்சியினர் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி நேற்று அக்கட்சி சார்பில் திருச்சி-கரைக்குடி பைபாஸ் சாலையில் மறியல் செய்வதன முடிவு செய்து போஸ்டர் ஒட்டினர். இதை தொடர்ந்து போலீசார் திருமயம், அரிமளம், கே.புதுப்பட்டி, நமணசமுத்திரம் போலீசாரை காலை முதலே சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்தனர். இந்நிலையில் 50 பேர் போலீசார் கெடுபிடியை மீறி சாலை மறியல் செய்ய முற்றபட்டனர். அப்போதுபோலீசார்அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags : party ,road ,arrest ,
× RELATED பாஜக வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் விசி கட்சியினர் கோரிக்கை