×

மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மன்னார்குடி, நவ. 20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 24ம் தேதி வடுவூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட செயலாளர் ராஜ ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மாநில 46 வது ஜூனியர் சிறுவர்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் வரும் 29 ம் தேதி முதல் டிச 1 ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேற் கணட சாம்பியன் பட்ட போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள திருவாரூர் மாவட்ட அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் நடைபெற உள்ளது.இந்த தேர்வு போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு 31.12.1999 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக 20 வயதிற்குள் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவராகவோ, மாவட்டத்தில் கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். மேலும் தேர்வு போட்டிகளுக்கு வரும் வீரர்கள் தங்களின் வயது மற்றும் இருப்பிட ஆதாரத்திற்கான சான்றின் நகல் அவசியம் கொண்டு வர வேண் டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Junior Kabaddi Tournament ,
× RELATED தோனி உள்ளிட்ட வீரர்களை உருவாக்கிய ராஞ்சி கிரிக்கெட் பிதாமகன் மரணம்