×

மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி

மன்னார்குடி, நவ. 20: திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை மெயின்ரோட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை யாக கிராமத்தின் சார்பில் 15 ஏக்கர் நிலம் இலவசமாக வாங்கி கொடுக்கப்பட்டது. மேலும் திருமக்கோட்டையை பூர்வீகமாக கொண்டு சிங்கப்பூரில் வாழும் உறவினர்கள் மூலம் நிதி பெறப்பட்டு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கை அறை கட்டிடம், அறுவை சிகிச்சை அரங்கம், லேப் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் தங்குமிடம் குடியிருப்புகள் என பெரிய அளவில் பழனியப்பா பார்வதியம்மாள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எனப் பெயரி டப்பட்டுள்ள மருத்துவமனைஇயங்கி வருகிறது. திருமக்கோட்டையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் இருக்க அனுமதித்திருக்கும் நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 5 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார். இவர்களை மற்ற ஊர்களுக்கு அனுப்பி விடுகின்ற காரணத்தினால் மருத்துவர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.இதனால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையின் நிலையை கண்டறிந்து போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : nurse ,physician ,
× RELATED நர்ஸ் மாயம்