×

முதல்வரின் சிறப்புகுறைதீர் முகாமில் 13 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு

திருவாரூர், நவ. 20: தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளை சேர்ந்த மொத்தம் 2 ஆயிரத்து 541 பயனாளிகளுக்கு ரூ 59 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் காமராஜ் பேசியதாவது, முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 342 முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 25 ஆயிரத்து 681 மனுக்கள் பெறப்பட்டன.இதில் தற்போது வரையில் 13 ஆயிரத்து 178 மக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் முதியோர் உதவித் தொகைக்கு வருமான வரம்பு என்பது ரூ 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக முதல்வர் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் எஞ்சியுள்ள முதியோர்களுக்கும் உதவித்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் பேசினார்.இதில் நாகை எம்பி செல்வராஜ், டிஆர்ஓ பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கமல் கிஷோர், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,CM ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு