×

குறுங்காடுகள் அமைக்கும் பணி துவக்கம்

மன்னார்குடி, நவ. 20: கஜா புயல் தாக்குதலில் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து போயின. குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் இருந்த நிழல் தரும் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் பெரிய அளவில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு அதன் மூலம் பேரா பத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு மரங்கள் அடர்ந்த காவிரிப்படுகை மாவட்டங்கள் எமது இலக்கு என்ற அடிப்படையில் செயல்பட்டு திருவாரூரை சேர்ந்த வனம் தன்னார்வ அமைப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் குறுங்காடுகளை அமைத்து வருகிறது.174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக 174 பாரம்பரிய மரங்கள் அடங்கிய குறுங்காடு அமைக்கும் பணி யை வனம் அமைப்பு கத்தார் தமிழ் நண்பர்கள் உதவியுடன் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்துடன் இணைந்து செய்ய உள்ளது. வருகிற டிசம்பர் 6 நெல் ஜெயராமன் நினைவாக உருவாக்கப்பட உள்ள இந்த குறுங்காடு அமைக்கும் பணியின் துவக்க பணிகள் நேற்று துவங்கியதுஇப்பணியை கல்லூரி முதல்வர் ரவி துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரபாகரன், வனம் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலை செனட் உறுப்பினர் சிவச்செல்வன், விலங்கியல் துறைதலைவர் ராமு, தாவரவியல் துறை பேராசிரியர் மகேஷ். என்சிசி அலுவலர் லெப் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

Tags :
× RELATED சென்னையில் புதிய திரைப்படங்களின் 4,000 சி.டி.க்களை பறிமுதல் செய்தது போலீஸ்