×

புதர் மண்டிகிடப்பதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம்

நீடாமங்கலம்,நவ.20: நீடாமங்கலம் ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை காடு மண்டிகிடப்பதால் புதிய குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும்அவலம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சில பணியாளர்கள் அங்குள்ள ஓட்டு குடியிருப்பு கட்டிடத்தில் தங்கி பணியாற்றி வந்தனர்.அங்கு தற்போது சிலர் மட்டும் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.அதே போன்று அப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 2 புதிய மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு சில ஆண்டுகள் யாரும் குடியேறாமல் அப்படியே கிடந்தது.இந்நிலையில் அங்குள்ள இரண்டு குடியிருப்புகளிலும் தற்போது பணியாளர்கள் தங்கியுள்ளதாக தெரிகிறது.மேலும் ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஸ்டேசன் மாஸ்டர் மற்றும் கேட்கீப்பர்கள் சிலர் வெளியூரை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அவர்கள் நீடாமங்கலம் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் அதிக வாடகை கொடுத்து வாடகைவீட்டில் குடியிருந்து பணிக்கு வருவதாக தெரிகிறது.

இவர்களின் நிலையையறிந்த தென்னக ரயில்வேதுறை நீடாமங்கலத்திலேயே தங்கி பணியாற்ற ஏற்கனவே உள்ள குடியிருப்புகள் இடையில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.இந்த குடியிருப்பு பணிகள் ஓரளவு முடிந்த நிலையில் சில பணிகள் மட்டுமே செய்யவேண்டிய நிலையில் உள்ளது.இப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் அங்கு இரவு நேரத்தில் ரயிலில் வரும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.மேலும் ஏற்கனவே இருக்கும் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை இருமருங்கிலும் காட்டு கருவேல் மரங்கள் மண்டி காடுகள் நிறைந்துள்ளது.ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே வடக்கு தெருவாசிகள் குடியிருப்பு சாலையில் செல்லும் போது அங்கு விஷ பாம்புகளின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அச்சத்துடன் குடியிருப்பு வாசிகள் சென்று வருகின்றனர். எனவே நீடாமங்கலம் ரயிவே நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காட்டு கருவேல் மரங்களை அகற்றி சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்