×

ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீஸ் விசாரணை

நாகர்கோவில், நவ.20: திருநெல்வேலியில் இருந்து ஜாம்ஷெட்பூர் செல்லும் ரயில், நேற்று காலை நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலில் முன் பதிவு இல்லாத பெட்டியில், ரேஷன் அரிசி மூடைகள் இருப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் ரயில்வே போலீசார் டவுன் ரயில் நிலையம் சென்றனர். அப்போது அங்கு பயணிகளுக்காக நின்ற அந்த ரயிலில் பார்த்தபோது கழிவறை அருகே சிறு, சிறு மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அரிசி மூடைகளை கைப்பற்றினர். அவற்றில் மொத்தம் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவற்றை கொண்டு வந்தது யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. திருநெல்வேலிக்கும், நாகர்கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த அரிசி மூடைகளை பெண் மற்றும் ஆண் ஒருவர் ஏற்றியதாக பயணிகள் சிலர் கூறி உள்ளனர். ஆனால் அவர்களை பற்றிய அடையாளம் எதுவும் தெரிய வில்ைல என தெரிவித்தனர்.

Tags :
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது