×

விஷக்குளவிகளால் மக்கள் அச்சம்

திருக்கனூர், நவ. 20: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காட்டுப் பகுதியில் வாழும் விஷக்குளவிகள் தற்போது விவசாய நிலங்களில் உள்ள புதர்களிலும், சாலை ஓரங்களில் உள்ள பனைமரங்களிலும் களிமண்ணால் கூடுகட்டி வாழ்ந்து வருகிறது.திருக்கனூர் பைபாஸ் சாலையின் ஒரு பகுதியில் உள்ள பனைமரத்தில் மிகப்பெரிய அளவில் விஷக்குளவிகள் களிமண்ணால் கூடு கட்டி உள்ளது. இந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை. மேலும் திருக்கனூர் கடைவீதியில் இட நெருக்கடி ஏற்பட்டால் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாகத்தான் செல்லும். இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் இந்த சாலையின் வழியே தான் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் உள்ள இந்த விஷக்குளவிகள் எப்போது வெளியேறும், யார் உயிரை குடிக்கும் என்று அச்சமாகவே உள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விவசாய நிலத்திற்கு சென்றபோது, விஷக்குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தார். இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது நடக்கும் முன் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை ஒன்றிணைந்து உடனடியாக இந்த குளவிக் கூண்டை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு...