×

முன்னாள் ராணுவ வீரர்கள் இறந்தால் அரசு மரியாதையுடன் அடக்கம்

புதுச்சேரி, நவ. 20:முன்னாள் ராணுவ வீரர்கள்  உயிரிழந்தால் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுமென முதல்வர்  நாராயணசாமி கூறினார். இது தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களிடம்  கூறியதாவது:உயர்  கல்வித்துறையில் கல்வி, விளையாட்டு, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில்  அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  கல்லூரி  அளவில் விளையாட்டு, கலாச்சார போட்டிகள் நடத்தி மாணவர்களை  ஊக்குவிக்க அமைச்சர்  அனைத்து கல்லூரிகளையும் அழைத்து பேசி ஒரு முடிவு  செய்துள்ளார்.அதன்படி  1988க்கு பிறகு நடத்தப்படாமல் இருக்கும் இளைஞர்  திருவிழா  மீண்டும் புதுச்சேரியில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி,  காரைக்காலில் உள்ள 100க்கும்  மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி  மாணவர்கள் கலந்து கொள்வார்கள். 2020ம்  ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து  பிப்ரவரி மாதத்துக்குள் இளைஞர் விழா நடத்தப்பட  முடிவு செய்யப்பட்டுள்ளது.   இதற்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து  ஆகியவற்றை கல்லூரி நிர்வாகங்கள்  ஏற்றுக் கொள்கிறது.

இந்த  போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பெறும் அணிகள் மற்றும்  மாணவர்களுக்கு விருதுகள், அரசு சான்றிதழ் வழங்கப்படும். இந்த  சான்றிதழ் வேலைவாய்ப்பில்  முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ரூ.75 லட்சம்  அரசு ஒதுக்கியுள்ளது.  கால்பந்து, கோகா, இறகுபந்து, கிரிக்கெட், ஹாக்கி   உள்ளிட்ட 21 வகையான  போட்டிகள் நடத்தப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள்  நீண்டகாலமாக பல்வேறு  கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளனர். நம்  நாட்டுக்காக ரத்தம் சிந்திய  ராணுவ வீரர்
களுக்கு உரிய மரியாதையும்  அவர்களுக்கு தேவையான உதவிகளையும்  செய்து தருவது அரசின் கடமை. இதற்கான  பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.  

அதன்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட  உதவித்தொகை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ.  11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  மேலும் பண்டிகை காலங்களில் வழங்கப்படும்  கூப்பன் ரூ. 3 ஆயிரத்தில் இருந்து  ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  எதிர்காலத்தில் கூப்பனுக்கான தொகை  பணமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  மேலும் கல்வி உதவித்தொகை  இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ வசதி  உள்ளிட்ட  வசதிகளை செய்து  தர அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.ராணுவத்தில்  பணிபுரிந்து ஓய்வு பெறும்  முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாநில அரசு எதுவும்  செய்யவில்லை, கண்டு  கொள்ளவில்லை என்ற எண்ணம் வந்து விடக்கூடாது. அவர்கள்  தியாகத்தை போற்றும்  வகையில் முன்னாள் ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் காவல்  துறை அணிவகுப்பு,  அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும். இவ்வாறு  அவர்கள் கூறினர்.


Tags : government ,death ,soldiers ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்