×

வாலிபர் மாயம்

திருக்கோவிலூர்,  நவ. 20: திருக்கோவிலூர் அடுத்த அத்திபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்  அந்தோணிதாஸ் மகன் மைக்கேல் (28). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார்  கேட்டரிங் கல்லூரியில் படித்துள்ளார். கடந்த ஆறு மாதமாக சேலம்  மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு விடுமுறைக்கு வந்து விட்டு மீண்டும்  ஏற்காடு போவதாக சொல்லி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஏற்காடு, புதுவை ஆகிய பகுதிகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் பிரேமபுஷ்பா மணலூர்பேட்டை காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றார்

Tags : Plaintiff ,
× RELATED மனைவி மாயமானதால் விரக்தி குடிநீர்...