ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, நவ. 20: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னாவரம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதி மற்றும் தெருவிளக்கு அமைத்திட வேண்டும், பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். திருநரங்குன்றம் கிராமத்தில் சுடுகாடு பாதை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி களமருதூர் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ராமு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பத்மநாபன், செயலாளர் தங்கமணி ஆகியோர் துவக்க உரையாற்றினார்கள். மாவட்ட தலைவர் பழனி, துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Democratic Youth Association ,
× RELATED குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப...