×

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் பலி

திருக்கோவிலூர்,  நவ. 20: திருக்கோவிலூர் அடுத்த பொ.மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர்  பாலகிருஷ்ணன் மகன் சிலம்பரசன்(32). இவர் சிமெண்ட் லோடு லாரி டிரைவர்.  இவருக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள மயிலாடு
தாங்கல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகள் சரிதா(30) என்பவருக்கும் சுமார் 10 வருடங்களுக்குமுன் திருமணம்  நடந்தது. இவர்களுக்கு ஜெயபிரியா (8), ஹரிஷ் (6) என இரண்டு குழந்தைகள்  உள்ளனர். இப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் சரிதா தலைவியாக உள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை சிலம்பரசன் வேலைக்கு சென்றுள்ளார். ஜெயபிரியா, ஹரிஷ் ஆகிய  இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் சரிதா அதே பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் கிணற்றில்  தடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கிணற்றின் பக்காட்டில் உள்ள பாறையில் அடிபட்டு கிணற்றுக்குள் இறந்து கிடந்தார். இந்நிலையில் மாலை வீட்டிற்கு வந்த  சிலம்பரசனும், குழந்தைகளும் சரிதாவை தேடிபார்த்தனர்.  
அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றின் வெளியே துணியும், வாளியும்  இருப்பதை பார்த்துள்ளனர்.

பின்னர் சிலம்பரசன் மற்றும் உறவினர்கள்  சந்தேகமடைந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது கிணற்றில் சடலமாக கிடந்த சரிதாவை  மீட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ், காவல் ஆய்வாளர்  ரத்தினசபாபதி, உதவி ஆய்வாளர் உலகநாதன்  மற்றும் போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சரிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அவரது தம்பி ஏழுமலை  கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirukovilur ,
× RELATED போதையில் தகராறு ரவுடி சரமாரி குத்தி கொலை: வாலிபர் கைது